மாற்றுதிறனாளிகளை காட்டி வெளிநாட்டில் பணம் வசூலிக்கும் கும்பல் தொடர்பில் எச்சரிக்கை

 

மன்னார் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு பணம் சேகரிப்பதாக கூறி வெளிநாட்டில் பண சேகரிப்பை பிரித்தானியாவில் இயங்கும் மன்னாரை சேர்ந்த அமைப்பு ஒன்று மேற்கொள்ள உள்ள நிலையில் குறித்த விடயம் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு மன்னார் மாவட்டத்தை சேர்ந்த பிரித்தானியாவில் வசிக்கும் மக்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாகவே மன்னார் வைத்தியசாலைகளுக்கு என வெளிநாடுகளில் கலைநிகழ்வுகள் என்ற பெயரில் விளையாட்டு நிகழ்வுகள் என்ற பெயரிலும் நடைபவணி என்ற பெயரிலும் பல லட்சம் பண சேகரிக்கப்பட்ட போதிலும் அவற்றில் சிறிய அளவிலான பணமே வைத்திய சாலைக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட தாகவும் மிகுதி பணம் தொடர்பில் உரிய பதில் எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது மன்னாரில் அநேகமான மாற்றுத்திறனாளிகள் அமைப்புகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்ற நிலையில் சில மாற்றுத்திறனாளிகளை பயன்படுத்தி வருமானம் சேர்க்கும், சொத்துக்களை சேர்க்கும் ,கும்பலுடன் இணைந்து வெளிநாடுகளில் மன்னார் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் என்ற பெயரில் பாரிய பண சேகரிப்பில் குறித்த அமைப்பு ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமது மோசடி நிகழ்வுக்கு வலு சேர்க்கும் வகையில் தங்களுடன் ஒத்துப்போகின்றவர்களையும் வெளி நாட்டிற்கு அழைத்து மோசடி நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் தெரிய வருகின்றது.

குறித்த நிகழ்வு மற்றும் அமைப்புகள் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு மன்னாரை சேர்ந்த புலம்பெயர் மக்கள் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்