மார்ச் மாதத்தில் பணவீக்கம் 2.2% ஆக அதிகரிப்பு

கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண்ணின் படி, ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையிலான ஒட்டுமொத்த பணவீக்க வீதமானது 2026 பெப்ரவரி மாதத்திலிருந்த 1.6% இலிருந்து, 2026 மார்ச் மாதத்தில் 2.2% ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், உணவுப் பணவீக்கமானது 2026 பெப்ரவரியில் நிலவிய 0.2% இலிருந்து மார்ச் மாதத்தில் 0.7% ஆகவும், உணவல்லாத தொகுதியின் பணவீக்கம் 2.3% இலிருந்து 2.9% ஆகவும் அதிகரித்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.