மாரடைப்பைத் தடுக்கும் பானங்கள்

மாரடைப்பைத் தடுக்கும் பானங்கள்

மாரடைப்பைத் தடுக்கும் பானங்கள்

🟥கொலஸ்ட்ரால் என்பது நமது இரத்தத்தில் இருக்கும் மெழுகு போன்ற பிசுபிசுப்பான பொருள். இது உடலில் புதிய செல்கள் மற்றும் ஹார்மோன்களை உருவாக்க உதவுகிறது. இப்படிப்பட்ட கொலஸ்ட்ரால் உடலில் அதிகமாகும் போது, அது இரத்தக்குழாய்களில் அப்படியே படித்து ப்ளேக்குகளை உருவாக்கி, இரத்த ஓட்டத்தில் தடையை ஏற்படுத்து, மாரடைப்பு, பக்கவாதம், பெருந்தமனி தடிப்பு போன்ற தீவிரமான பிரச்சனைகளை தூண்டி உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும்.

🟥தற்போதைய நவீன உலகில் ஆரோக்கியமற்ற ஜங்க் உணவுகள் நம்மைச் சுற்றி அதிகம் உள்ளன. இந்த உணவுகளில் கொலஸ்ட்ரால் அதிகம் நிறைந்திருப்பதால், இந்த உணவுகளை அதிகமாக உட்கொள்ளும் போது, நாளடைவில் இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகரித்து, ஒரு கட்டத்தில் மாரடைப்பின் அபாயத்தை அதிகரித்துவிடுகிறது.

🟥ஆனால் நமது உடலில் உள்ள அதிகமான கொலஸ்ட்ராலைக் கரைக்கும் நிறைய பானங்கள் உள்ளன. இந்த பானங்களை இரவு நேரத்தில் குடித்து வந்தால், கொலஸ்ட்ராலை குறைத்து மாரடைப்பு வருவதைத் தடுக்கலாம். இப்போது அந்த பானங்கள் எவையென்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

மஞ்சள் பால்

🔷மஞ்சள் கலந்த பால் ஏராளமான நன்மைகளை உள்ளடக்கியது என்பதை அனைவருமே அறிவோம். அதுவும் இந்த பாலில் சேர்க்கப்படும் மஞ்சளில் குர்குமின் என்னும் பொருள் உள்ளது. இது கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைப்பதோடு, தமனிகளில் ப்ளேக்குகளின் அபாயத்தைக் குறைக்கும். அதுவும் இந்த மஞ்சள் பாலை தினமும் இரவு தூங்கும் முன் குடிப்பது நல்லது. இதனால் கொலஸ்ட்ரால் பராமரிக்கப்படுவதோடு, இதய ஆரோக்கியமும் மேம்படும்.

பாதாம் பால்

🔷பாதாம் பாலில் வைட்டமின் ஈ மற்றும் ஆரோக்கியமான கொழுப்புக்கள் உள்ளன. இவை கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைத்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன. எனவே மாரடைப்பு வரக்கூடாது, இதயம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்று விரும்பினால், பாதாம் பாலை இரவு தூங்கும் முன் குடித்து வாருங்கள்.

பீட்ரூட் ஜூஸ்

🔷பீட்ரூட் ஜூஸ் இயற்கையாகவே கொலஸ்ட்ராலைக் குறைக்கும். ஏனெனில் இதில் அதிக நார்ச்சத்துடன் நைட்ரேட்டும் உள்ளன. இவை இரத்த நாளங்களை விரிவடையச் செய்து, இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் மற்றும் பக்கவாதத்திற்கு வழிவகுக்கும் இரத்தம் உறையும் அபாயத்தைக் குறைக்கும். ஆகவே இந்த பீட்ரூட் ஜூஸை அடிக்கடி குடித்து வர இதய ஆரோக்கியமும் மேம்படும், மாரடைப்பின் அபாயமும் குறையும்.

செம்பருத்தி டீ

🔷செம்பருத்திப்பூவில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. இந்த செம்பருத்திப் பூவைக் கொண்டு டீ தயாரித்து குடிக்கும் போது, அது இரத்த அழுத்தத்தையும், கொலஸ்ட்ராலையும் குறைக்கிறது. அதுவும் இதில் உள்ள ஆக்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இரத்தக்குழாய்களில் ப்ளேக்குகள் படிவதைக் குறைக்கிறது. எனவே சிறப்பான பலனைப் பெற இந்த டீயை இரவு தூங்கும் முன் குடியுங்கள்.

க்ரீன் டீ

🔷தினமும் ஒரு கப் க்ரீன் டீயைக் குடித்து வந்தால் இதய பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். ஏனெனில் க்ரீன் டீயில் கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளன. அதுவும் இந்த க்ரீன் டீயை இரவு தூங்கும முன் குடிப்பது இன்னமும் நல்லது. இப்படி குடிப்பதன் மூலம், உடல் ரிலாக்ஸாக இருக்கும், நல்ல தூக்கம் கிடைக்கும் மற்றும் இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.

மாரடைப்பைத் தடுக்கும் பானங்கள்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்