மாமுனை கடற்கரையில் கைக்குண்டு மீட்பு!
யாழ் வடமராட்சி கிழக்கு மாமுனை பகுதியில் நேற்று வியாழக்கிழமை மதியம் 1:30 மணியளவில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது
மாமுனை கடற்கரை பகுதியில் கைக்குண்டு ஒன்று இருப்பதை அவதானித்த கடற்படையினரால் உடனடியாக பாதுகாப்பான முறையில் மீட்கப்பட்டுள்ளது
மீட்கப்பட்ட கைக்குண்டினை கடற்படையினர் மருதங்கேணி பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதுடன், இது சம்பந்தமாக மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்
