மாமா, மாமியின் மகன் அல்லது மகளை இனி திருமணம் செய்ய முடியாது

இந்தியா – உத்தரகாண்ட் மாநில சட்டப் பேரவையில் நேற்று வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்ட பொது சிவில் சட்டத்தில் அத்தை, மாமனின் மகன் அல்லது மகளை திருமணம் செய்யக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தின்படி, பலதார திருமணத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மறுமணம், விவாகரத்து குறித்த பொது விதிகள் அமலுக்கு வருகின்றன.

அதேபோல், திருமணங்களைப் போன்று, லிவ்-இன் உறவில் இருக்க விரும்புவோரும் அரசிடம் பதிவு செய்து கொள்வது கட்டாயாமாகிறது. தவறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. லிவ்-இன் உறவில் இருக்க விரும்புவோரும் அரசிடம் பதிவு செய்ய தவறினால் 6 மாதம் சிறை தண்டனை மற்றும் 25,000 அபராதம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, திருமணம் செய்ய தடை விதிக்கப்பட்ட உறவுகள் என்ற பிரிவில், தந்தையின் சகோதரி (அத்தை, மாமி) யின் மகன் அல்லது மகள் மற்றும் தாயின் சகோதரரின் (மாமா) மகன் அல்லது மகள் என்ற உறவுமுறையும் இடம்பெற்றுள்ளது.