மாமரத்திலிருந்து விழுந்து 12 வயது சிறுமி மரணம்

திருகோணமலை – ஆயிலியடி பகுதியில் நேற்று சனிக்கிழமை மாலை 4 மணியளவில் மாமரத்தில் இருந்து விழுந்து சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.

ஆயிலியடி பகுதியை சேர்ந்த 12 வயதுடைய சிறுமியே இதன் போது உயிர் இழந்துள்ளார்.

வான்எல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆயிலியடி பகுதியில் மாங்காய் பறிப்பதற்காக மரத்தில் ஏறிய போது மரத்தின் கிளை உடைந்ததில் மரத்திலிருந்து சிறுமி கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் வான்எல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்