
மாமனார் கத்தியால் குத்தியதில் மருமகன் உயிரிழப்பு : சந்தேகநபர் தலைமறைவு!
தெரணியகலை, மாலிபொடவத்த தேயிலைத் தொழிற்சாலைப் பிரிவில் மாமனார் நடத்திய கத்திக்குத்துத் தாக்குதலில் மருமகன் உயிரிழந்தார்.
நேற்று வெள்ளிக்கிழமை மாலை இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதையடுத்து, மாமனார் இவ்வாறு கூரிய ஆயுதத்தால் மருமகனைத் தாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதில் பலத்த காயமடைந்த மருமகன், பிரதேசவாசிகளால் தெரணியகலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் 33 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை எனவும், அவரது மனைவி தற்போது தொழிலுக்காக வெளிநாடு சென்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொலையைச் செய்த பின்னர் மாமனார் பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதுடன், அவரைக் கைது செய்வதற்காகத் தெரணியகலை பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
