திருகோணமலையில் மாபெரும் தொழிற்சந்தை
திருகோணமலை மாவட்ட செயலகத்தின் மனித வலு, வேலைவாய்ப்பு பிரிவு, திறன் மற்றும் தொழில் கல்விப்பிரிவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரிவு ஆகியன இணைந்து மாபெரும் தொழில் மற்றும் தொழில் கல்வி சந்தையை மாவட்ட இளைஞர் யுவதிகள் பாடசாலை விட்டு விலகியோர் தொழில் தேடுவோர் பயன் பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தொழிற் சந்தை இன்று செவ்வாய்க்கிழமை திருகோணமலை விக்னேஸ்வரா மகாவித்தியாலயத்தில் நடத்தப்பட்டது.
இந்நிகழ்வில் உள்ளுர் வெளியூர் தொழில் தருநர்கள், தொழிற்பயிற்சி நிறுவனங்கள், உயர் கல்வி நிறுவனங்கள், வெளிநாட்டு வேலைவாயப்பு முகவர்கள் இளைஞர் யுவதிகளுக்கான தொழில் வழி காட்டல் சேவைகள் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சிகள் மற்றும் ஆலோசனைகள் வழிகாட்டல்களை மேற் கொண்டனர் இந்த நிகழ்வில் மாவட்டத்தை சேர்ந்த 1000 இளைஞர்கள் யுவதிகளும் அதே போன்று 1000 மாணவர்களும் கலந்து கொண்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்