மான் வேட்டை: மூன்று பேர் கைது

ஹட்டன் கொழும்பு பழைய வீதியில் உள்ள ஸ்ரேதன் தோட்ட பகுதியில் மானை வேட்டையாடி கொண்டு செல்ல முயற்சி செய்தவர்கள் இன்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

ஸ்ரேதன் தோட்ட பகுதியில் மான் வேட்டையாடி வாகனத்தில் கொண்டு செல்வதாக ஹட்டன் பொலிஸ் நிலைய குற்ற தடுப்பு அதிகாரி ஜயசிங்கவுக்கு கிடைத் போது வாகனத்தில் மான் ஒன்றை வேட்டையாடி உயிர் அற்ற நிலையில் முழுமையாக கொண்டு செல்ல முயற்சி செய்தமை தெரியவந்ததுடன் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நாளை ஞாயிற்று கிழமை ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக குற்றத்தடுப்பு பிரவின் அதிகாரி ஜயசிங்க தெரிவித்தார்.