மான் இறைச்சியுடன் ஒருவர் கைது
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கைவேலியை பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் மான் இறைச்சியுடன் நேற்று திங்கட்கிழமை புதுக்குடியிருப்பு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் கைவேலி பகுதியில் நடத்தப்பட்ட விஷேட சோதனை நடவடிக்கையில் 3 கிலோ கிராம் மான் இறைச்சி உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைவேலி பகுதியினை சேர்ந்த 40 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் விசாரணைகளின் பின்னர் இன்று செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்
