
மானிப்பாய் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு
உள்ளூராட்சி வார நிகழ்வின்போது, வலி வடக்கு பிரதேச சபையில் நடைபெற்ற கயிறு இழுத்தல் போட்டியில் பங்குபற்றி, 2ஆம் இடத்தை பெற்றுக்கொண்ட வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
மானிப்பாய் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதன்போது குறித்த அமர்வின்போது, கயிறு இழுத்தல் போட்டியில் பங்குபற்றிய உறுப்பினர்களிடம் வெற்றிக் கிண்ணத்தை கையளித்து, அவர்களுக்கான பதக்கங்களை அணிவித்து மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் ஜெசீதன் கௌரவித்தார்.
