மானிப்பாய் பிப்பிலி இந்து மயான அபிவிருத்தி தொடர்பில் களவிஜயம்
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் மானிப்பாய் பிப்பிலி இந்து மயான அபிவிருத்தி தொடர்பில் களவிஜயம் இன்றையதினம் புதன்கிழமை இடம்பெற்றது.
வட்டார மக்கள் பிரதிநிதியாகிய கலொக் கணநாதன் உஷாந்தனால் பிரதேசசபையின் மயான குழுவினரிடம் மேற்கொள்ளப்பட அழைப்பின் பேரில் களவிஜயம் இடம்பெற்றது.
இதன் போது நிறைவேற்ற வேண்டிய விடயங்கள் தொடர்பில் பிரதேச சபை உறுப்பினர் கலொக் கணநாதன் உஷாந்தனால் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.
மயான நடைமுறை தொடர்பில் அறிவிப்பு பலகை, உள்ளக மீள் கட்டுமாணம், எரி கெட்டகை புனரமைப்பு, மின் விளக்குகள் பெருத்தல், நூற்றாண்டு பழைமையான கட்டிடத்தை பாதுகாத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இதன் போது மயான குழுவினரிடம் சுட்டிக்காட்டப்பட்டது.