மாத்தளை வஹாகோட்டை அந்தோனியார் தேவாலய வருடாந்த திருவிழாவில் பங்கேற்ற எதிர்க்கட்சி தலைவர்

மாத்தளை வஹாகோட்டை வரலாற்று சிறப்புமிக்க அந்தோனியார் தேவஸ்தானத்தில் இடம்பெற்ற புனித அந்தோனியார் வருடாந்த திருவிழாவில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று ஞாயிற்றுக்கிழமை கலந்து கொண்டார்.

இந்த தேவாலயம் கிறிஸ்தவ பக்தர்களின் புனித தேவஸ்தானங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.1696 இல்  ஜூசேவாஸ் அருட்தந்தையவர்களால் இத்தேவஸ்தானம் மறுசீரமைக்கப்பட்டு கட்டியெழுப்பப்பட்டுள்ளதோடு, பழமையான புனித ஸ்தானமாகவும் கருதப்படுகிறது.

தேவாலயத்திற்கு யாத்திரைக்கு வரும் பக்தர்கள் தங்குவதற்கு தேவாலய வளாகத்தில் ஓய்வு மண்டபம் தேவை என எதிர்கட்சித் தலைவரிடம் அருட்தந்தைகள் மூலம் எடுத்துரைக்கப்பட்டதோடு, இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்திய எதிர்க்கட்சித் தலைவர் குறித்த தேவையை பூர்த்தி செய்வதற்கான பணிகளை ஆரம்பிப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்