மாத்தறை வர்த்தக நிலையமொன்றிலிருந்து இந்திய முட்டைகள் மீட்பு

வல்கம பகுதியில் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தொகை முட்டைகள் வர்த்தக நிலையம் ஒன்றிலிருந்து நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரிகள் மற்றும் சுகாதார பிரிவின் உணவு கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகளினால் மீட்கப்பட்டுள்ளன.

மேலும், இது குறித்து அவர்கள் கால்நடை உற்பத்தி, சுகாதாரத் திணைக்களத்திற்கு அறியப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அரச வணிகக் கூட்டுத்தாபனத்தினால், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை, வெதுப்பக உற்பத்திகளுக்காக மாத்திரம் வழங்குவதற்கு கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம் அனுமதி வழங்கி இருந்தது.

இந் நிலையில், குறித்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளரது சகோதரர், வெதுப்பகம் ஒன்றை நடத்தி வருவதாகவும், அவருக்கு கிடைக்கப்பெற்ற முட்டைகள் குறித்த வர்த்தக நிலையத்திலிருந்து மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்