மாத்தறை பிரதான வீதியில் விபத்து – 10 பேருக்கு காயம்

 

திஸ்ஸ-மாத்தறை பிரதான வீதியில் ஹங்கம-கிவுல சந்தியில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற விபத்தில் 10 பேர் காயமடைந்துள்ளனர்.

டிப்பர் லொரியும் ஒன்றும் தனியார் பஸ் ஒன்றும் மோதிய நிலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்தினால் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விபத்தினால் காயமடைந்தவர் தங்காலை மற்றும் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.