மாத்தறை நீதிமன்றத்தில் முன்னிலையானார் தேசபந்து
பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
2023ஆம் ஆண்டு மாத்தறை பெலேன பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் அவர் உள்ளிட்ட 8 பேரை கைது செய்யுமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்தநிலையில் அவர் பல வாரங்களாக தலைமறைவாகியிருந்த நிலையில் இன்று புதன்கிழமை காலை மாத்தறை நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
