மாத்தறை சிறைச்சாலை விபத்து : மற்றுமொரு கைதியும் உயிரிழப்பு!

மாத்தறை சிறைச்சாலையில் உள்ள கட்டடமொன்றின் மீது மரமொன்று முறிந்து விழுந்ததில் காயமடைந்த நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மற்றொரு கைதியும் உயிரிழந்ததாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

43 வயதான கைதி ஒருவரே நேற்று வியாழக்கிழமை உயிரிழந்தார்.

அதன்படி, இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2ஆக உயர்ந்துள்ளது.

இந்த விபத்தில் 11 பேர் காயமடைந்த நிலையில் மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் ஆபத்தான நிலையிலிருந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது காயமடைந்தவர்களில் 7 பேர் மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதுடன், மேலும் மூன்று பேர் தொடர்ந்து மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருகின்றனர்.