மாத்தறையில் வாகனப் போக்குவரத்துக்கு மட்டுப்பாடு

எதிர்வரும் 14 ஆம் திகதி நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலையொட்டி, மாத்தறை ராகுல் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம் நிறுவப்பட உள்ளது.

எனவே, பாராளுமன்ற தேர்தல் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துத் திட்டத்தின் படி, எதிர்வரும் 12 ஆம் திகதி பிற்பகல் 02.00 மணி முதல் 13 ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை, வாக்குப்பெட்டிகள் சம்பந்தப்பட்ட மையங்களுக்கு அனுப்பப்படும் வரை, வீதியில் போக்குவரத்து நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே மாத்தறை கரையோர வீதியில் ரணவிரு சுற்றுவட்ட வீதியில் இருந்து எலியகந்த வரையான வீதியை தவிர்த்து பின்வரும் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மாத்தறையில் இருந்து கதிர்காமம் நோக்கியும் கதிர்காமத்திலிருந்து மாத்தறை நோக்கியும் செல்லும் வாகனங்கள் புதிய தங்காலை வீதி மற்றும் பழைய தங்காலை வீதியில் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்