மாத்தறையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் படுகாயம்

மாத்தறை மாவட்டத்தின் ரன்ன கஹடமோதர பிரதேசத்தில் இன்று புதன் கிழமை காலை 10.45 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் ஆபத்தான நிலையில் தங்காலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தனிப்பட்ட தகராறு காரணமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.