மாதவிடாய் காலத்தில் மாதம் ஒருநாள் கட்டாய விடுமுறை!

இந்தியா-கர்நாடகாவில் பெண் பணியாளர்களின் நலனிற்காகவும் மற்றும் பணியிடத்தில் அவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்வதற்காகவும், மாதவிடாய் விடுப்பு கொள்கையைக் கர்நாடக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி, அரசு, தனியார் நிறுவனங்கள், ஆடை, பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் தகவல் தொழில் நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஒரு மாதத்தில் சம்பளத்துடன் கூடிய ஒரு நாள் விடுப்பு வழங்க கர்நாடக அமைச்சரவை கடந்த மாதம் ஒப்புதல் அளித்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், பெண் பணியாளர்களுக்கு மாதவிடாய் காலத்தில் மாதம் ஒருநாள் கட்டாய விடுப்பு வழங்குவதாகக் கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, 18 முதல் 52 வயதுடைய பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் மாதம் ஒருநாள் சம்பளத்துடன் கூடிய கட்டாயம் விடுப்பு வழங்கப்படவேண்டும்.

விடுப்பு எடுப்பதற்கு பெண்கள் எந்தவித மருத்துவ ஆவணங்களையும் சமர்ப்பிக்கவேண்டியதில்லை.

அதேவேளை, ஒரு மாதத்தில் மாதவிடாய் கால விடுப்பு எடுக்கவில்லையென்றால் அந்த விடுப்பை அடுத்த மாதம் சேர்த்து (2 நாட்களாக) எடுக்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.