மாதகல் கடலில் படகு கவிழ்ந்து விபத்து: ஒருவர் மாயம்

-யாழ் நிருபர்-

மாதகலில் இருந்து கடற்றொழிலுக்கு சென்ற இளைஞர்கள் பயணித்த படகு இன்று புதன் கிழமை அதிகாலை நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பாதுகாப்பாக கரை சேர்ந்துள்ளதுடன் மற்றையவர் காணாமல் போயுள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இரண்டு இளைஞர்கள் கடற்றொழிலுக்கு சென்றுள்ள நிலையில் அவர்கள் பயணித்த படகு திடீரென விபத்துக்குள்ளானது. இந்நிலையில் படகில் பயணித்த ஒருவர் நீந்திக்கொண்டிருந்த வேளை அருகே வந்த படகின் உதவியுடன் காப்பாற்றப்பட்டுள்ளார். மற்றைய இளைஞர் காணாமல் போயுள்ளார்.

அவரை தேடும் நடவடிக்கைகளில் கடற்படையினரும் மீனவர்களும் இணைந்து ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்