மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது!

-பதுளை நிருபர்-

 

பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தொளும்புவத்தை மற்றும் வராதொலை பகுதிகளில் சட்ட விரோதமான அனுமதி பத்திரம் இன்றி மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்ட இருவரை பசறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த இரண்டு சந்தேக நபர்களும் 34, 40 வயதுடைய தொளும்புவத்தை மற்றும் வராதொலை பகுதியை சேர்ந்தவர்கள் என பசறை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இரண்டு சந்தேக நபர்களையும் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பசறை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்