மாணவ குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் படுகாயம் : ஒருவர் கைது!
-யாழ் நிருபர்-
முல்லைத்தீவு விசுவமடு பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவர்கள் இரு குழுக்களாக பிரிந்து ஒருவர் மீது ஒருவர் தாக்குதல் மேற்கொண்டதில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பாடசாலையில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களிடையே கருத்து வேறுபாடு முற்றியதில் இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த மோதலில் ஒரு மாணவனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், விசுவமடு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் ஒரு மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பாடசாலையின் பல்வேறுபட்ட நிர்வாக நிதி மோசடிகள் தொடர்பில் பல செய்திகள் கடந்த காலங்களில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
