மாணவி கடத்தப்பட்டமைக்கான காரணம் வெளியானது

பாடசாலை மாணவியை கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞன், பாடசாலை மாணவி கடத்தப்பட்டமைக்கான காரணத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

குறித்த சந்தேக நபர் தனது மாமன் மகளையே இவ்வாறு கடத்திச் சென்றுள்ளதுடன்  இரண்டு வருடங்களுக்கும் மேலாக ஜப்பானில் பணிபுரிந்து அங்கு சம்பாதித்த பணத்தை தனது மாமாவிடம் கொடுத்ததாக பொலிஸ் காவலில் உள்ள சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பணம் தமக்கு திருப்பிக் கிடைக்காத காரணத்தினால் இவ்வாறான செயலைச் செய்யத் தூண்டியதாகவும் சந்தேக நபர் கூறியுள்ளார்.

தவுலகல பிரதேசத்தில் மாணவி ஒருவர் நேற்று முன்தினம் கடத்தப்பட்ட நிலையில் குறித்த மாணவி மற்றும் சந்தேக நபரை கண்டு பிடிக்க பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

இந்நிலையில் கடத்தலை மேற்கொண்ட சந்தேகநபரின் கையடக்க தொலைபேசி தரவுகளை பொலிஸார் ஆராய்ந்து வந்துள்ளனர்.

மேலும் அம்பாறை பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கியதையடுத்து, சந்தேகநபரும் மாணவியும் இன்று திங்கட்கிழமை காலை அம்பாறை பேருந்து நிலையத்தில் இருந்து கண்டி நோக்கி பயணிக்க குளிரூட்டப்பட்ட பேருந்தில் தங்கியிருந்த போதே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், மாணவியை வைத்தியரிடம் அனுப்பியுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்