மாணவியை மதுபானம் பருகச் செய்த ஆசிரியர் கைது

இரத்தினபுரி – பெல்மதுளை பகுதியில் 19 வயது மாணவி ஒருவரை, மதுபானம் பருகச் செய்த குற்றச்சாட்டில் தனியார் மேலதிக வகுப்பு ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை மதுபானத்தை அருந்திய குறித்த மாணவி கஹவத்தை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,

பெல்மதுளை நகரில் காரில் வந்து இறங்கிய மாணவி தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டதால் அவரை குழுவொன்று விசாரித்துள்ளது.

இதன்போது அவர் மதுபானம் அருந்தியிருந்தமை கண்டறியப்பட்டதுடன் காரில் இருந்த மற்றைய நபரும் மதுபோதையில் இருந்துள்ளமை தெரிய வந்துள்ளது.

குறித்த குழு மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் அந்த நபர் மாணவியின் மேலதிக வகுப்பு ஆசிரியர் எனத் தெரியவந்துள்ளது.

மேலும் அந்த நபரை அங்கிருந்த குழுவினர் தாக்கியுள்ளதுடன், அவரை பெல்மதுளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இதேவேளை சந்தேகநபரை இன்று திங்கட்கிழமை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

Minnal 24FM Logo Minnal24 FM
LIVE
மட்டக்களப்பில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி மின்னல்24 Whatsapp Mobile +94755155979 OFFICE +94652227172