மாணவியை துஷ்பிரயோகம் செய்த முச்சக்கரவண்டி சாரதிக்கு 12 வருட கடுங்காவல் தண்டனை
பாடசாலை மாணவி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 34 வயதான முச்சக்கரவண்டி சாரதி ஒருவருக்கு 12 வருட கடுங்காவல் தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2012ஆம் ஆண்டு கொழும்பின் புறநகர்ப் பகுதியில் உள்ள வீடொன்றில் தாயுடன் இருந்த 13 வயது பாடசாலை மாணவி ஒருவரை வலுக்கட்டாயமாக தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று துஷ்பிரயோகம் செய்த வழக்கில் 10 வருட விசாரணையின் முடிவில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க குற்றவாளிக்கு 25,000 ரூபா அபராதம் விதித்ததுடன், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 2 இலட்சம் ரூபா நட்டஈடு வழங்குமாறும் உத்தரவிட்டார்.
