மாணவர்களை மகிழ்வித்து கொண்டாடிய அதிபரும் ஆசியர்களும் !

களுவாஞ்சிக்குடியில் 3000 மாணவர்களை மகிழ்வித்து பாராம்பரிய கலாசாரங்களும் இணைந்த வகையில் ஆசிரியர்களால் மாணவர்களுக்கு மதிய உணவளித்து நடாத்தப்பட்ட சிறுவர் தின நிகழ்வு

களுவாஞ்சிகுடி மட்/ பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையின் 3000 மாணவர்களை ஒன்றிணைத்ததாக சர்வதேச சிறுவர் தினம் இன்று செவ்வாய்க்கிழமை பாசாலையின் ஆசிரியர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இச் சிறுவர் தின நிகழ்வு பாடசாலை முதல்வர் சபேஸ்குமார் தலைமையில் நடைபெற்றது.

பாடசாலைக்கு மாணவர்கள் வருகை தரும் போது ஆசிரியர்களால் அனைவருக்கும் கற்கண்டு வழங்கி, பின்னர் சிறுவர் தினத்தினை நினைவுபடுத்தும் பதாதைகள் ஆசிரியர்களால் ஏந்தியவாறு வீதி விழிப்புணர்வு ஊர்வலமாக மாணவர்கள் பாடசாலைக்கு அழைத்துவரப்பட்டு, நினைவு கேக் வெட்டப்பட்டு, பின்னர் 3000 மாணவர்கள் ஒன்றாக பலூன்கள் வானில் பறக்க விட்டு, மாணவர்களை மகிழ்விக்க விளையாட்டு நிகழ்வுகள் நடைபெற்று, ஆசிரியர்களின் நிதிப்பங்களிப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட மதிய போசனம் 3000 மாணவர்ககளுக்கும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதன் போது பல்வேறு கண்கவர் விளையாட்டுகளும், ஆசிரியர்கள் மாணவர்களும் இணைந்து விளையாட்டு நிகழ்வுகளும் நடைபெற்றது.

இதன் போது கிராமிய பாராம்பரிய விளையாட்டான பசுவும் புலியும் விளையாட்டு மிகச்சிறப்பான முறையில் நடைபெற்றதுடன் , இது அனைவரினதும் கவனத்தையும் ஈர்த்துள்ளது.