மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனை

-பதுளை நிருபர்-

பதுளையில் பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து மாவா போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது.

பதுளை நகரில் கடந்த சில நாள்களாக பாடசாலை மாணவர்களுக்கு (மாவா) என அழைக்கப்படும் ஒருவகை போதைப்பொருளை விற்பனைச் செய்த ஹாலி எல பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய நபர் பதுளை பிரதான பஸ் நிலையத்தில் வைத்து இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

பதுளை விசேட பொலிஸ் பிரிவிற்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து,

பதுளையில் குற்றப்புலனாய்வு பிரிவினருடன் இணைந்து நடத்திய சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைதுச்செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடமிருந்து 20 மாவா போதைப்பொருள் பக்கட்டுகள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரை இன்று பதுளை நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இவ்விடயம் தொடர்பான மேலதிக விசாரணையை முன்னெடுத்துள்ளதாகவும் பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.