
மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்தவர் கைது
கொழும்பில் பாடசாலை மாணவர்களுக்கும் மேலதிக வகுப்பு மாணவர்களுக்கும் கஞ்சா கலந்த போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு 15, அளுத் மாவத்தை வீதியில் வசிக்கும் 47 வயதுடைய ஒருவரையே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து, 202 போதை மாத்திரைகள், கஞ்சா கலந்த 25 போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த 20,500 ரூபா பணமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
