மாணவர்களுக்கு ஆபாச காணொளி காண்பித்த ஆசிரியர்

இரத்தினபுரி ஓபநாயக்க பகுதியில் பாடசாலை மாணவர்களுக்கு தொலைபேசியில் ஆபாச காணொளிகளை காண்பித்ததாக கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெயியந்தர பகுதியை சேர்ந்த 34 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரை இன்று சனிக்கிழமை நீதிவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக ஓபநாயக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர்.