
மாணவர்களால் வடிவமைக்கப்பட்ட குமார் சங்கக்காரவின் உருவச்சிலை
-யாழ் நிருபர்-
யாழ்.பல்கலைக்கழக இறுதி வருட விளையாட்டுக்குழு மாணவர்களினால் வடிவமைக்கப்பட்ட மூன்றரை அடி உயரமான குமார் சங்கக்காரவின் உருவச்சிலை வடிவமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் அக்டோபர் 27 அன்று குமார் சங்கக்கார 45 ஆவது அகவையில் காலடி பதிக்கின்றார்.
யாழ். பல்கலைக் கழக வளாகத்திற்குள் அன்றைய தினத்தில் அந்த உருவச்சிலை திறந்துவைக்கப்படும், என யாழ் பல்கலைக்கழக இறுதி வருடவிளையாட்டுக்குழு மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.


