மாணவன் கொல்லப்பட்ட சம்பவத்தின் எதிரொலி : டிக்டொக் செயலிக்கு தடை!
அல்பேனிய அரசாங்கம், ஒரு வருடத்திற்கு டிக்டொக் செயலியின் பயன்பாட்டிற்குத் தடை விதிப்பதாக அறிவித்துள்ளது.
அண்மையில் சமூகவலைத்தளமான டிக்டொக் செயலி மூலம் இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட தகராற்றில் மாணவன் ஒருவன் சக மாணவனை, கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனையடுத்து மாணவர்களிடையே வன்முறையைத் தூண்டுவதாகக் கூறி டிக்டொக் செயலிக்கு அல்பேனியா அரசாங்கம் தடை விதித்துள்ளது.
இது அடுத்த ஓராண்டுக்குத் தொடரும் என அந்த நாட்டின் பிரதமர் எடி ரமா அறிவித்துள்ளார்.
எனினும் அல்பேனிய அரசின் இந்த முடிவு அவசரமாக எடுக்கப்பட்டு இருப்பதாக டிக்டொக் செயலியின் பைட் டான்ஸ் நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது.
இதற்கு பதிலளித்துள்ள பிரதமர், அரசின் இந்த முடிவு ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருடன் பலமுறை நடத்தப்பட்ட சந்திப்புக்குப் பின்னரே எடுக்கப்பட்டு இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.