
மாணவனை மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற பெண்
-யாழ் நிருபர்-
யாழ் . வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரிக்கு அருகாமையில் நேற்று செவ்வாய்க்கிழமை பாடசாலை மாணவனை மோட்டார் சைக்கிள் மோதி காயப்படுத்தி விட்டு தப்பிச்சென்றுள்ளது.
சிவரூபன் லோஷனன் என்ற 12 வயதுடைய மாணவனே இதன் போது காயமடைந்துள்ளார்.
சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,
குறித்த மாணவன் நேற்று செவ்வாய்க்கிழமை காலை 7.30 மணியளவில் துவிச்சக்கர வண்டியில் பாடசாலைக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் பாடசாலைக்கு அருகில் மாணவன் பயணித்துகொண்டிருந்த போது மாணவனுக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் குறித்த மாணவனை மோதியதுடன் தப்பிச்சென்றுள்ளார்.
இதேவேளை கீழே விழுந்த மாணவனை பாடசாலைக்கு வெளியில் வீதி கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த சிரேஸ்ர மாணவர்கள் அவதானித்து அதிபர் மற்றும்ஆசிரியர்களுக்கு தெரியப்படுத்தியதுடன் வீட்டிற்கும் தகவல் வழங்கப்பட்டு பின்னர் மாணவன் வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை மாணவனுக்கு கையில் முறிவு ஏற்பட்டுள்ள நிலையில் சங்கானை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
