மாணவனை தாக்கிய அதிபர் கைது

மாத்தறை அக்குரஸ்ஸ பிரதேசத்தில் உள்ள கனிஷ்ட பாடசாலையில் 4 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவன் அதிபரால் தாக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாணவனிடம் ஏ4 தாளினை கொண்டு வருமாறு கூறியும் அவர் கொண்டு வராமை காரணமாக அதிபர் மாணவனை 15ஆம் திகதி தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

வீட்டுக்குச் சென்ற மாணவன் திடீரென வாந்தி எடுத்ததையடுத்து பெற்றோர் இதுகுறித்து வினாவிய போது அதிபர் தாக்குதல் நடத்தியமை தெரியவந்துள்ளது.

இதையடுத்து மாணவன் அக்குரஸ்ஸ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

சம்பவம் தொடர்பில் பங்கம பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டை அடுத்து குறித்த அதிபர் நேற்று வெள்ளிக்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இன்று ஞாயிற்றுக்கிழமை மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.