மாட்டிறைச்சி உண்ண வேண்டாம்: மக்களுக்கு அவசர எச்சரிக்கை
கால்நடைகள் மத்தியில் வைரஸ் வேகமாக பரவி வருவதால் மாட்டிறைச்சியை உட்கொள்வதை தவிர்க்குமாறு கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
வடமேல் மாகாணம் மற்றும் குருணாகல் மாவட்டங்களிலும் கால்நடைகளுக்கு பரவும் வைரஸ் தொற்று காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
வட மேல் மாகாணத்தில் உள்ள 46 கால்நடை வைத்திய அதிகாரி பிரிவுகளில் 34 கால்நடைகளுக்கு இந்நோய் பரவியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் வடமேல் மாகாணத்தில் இருந்து கால்நடைகளை ஏற்றிச் செல்வது கடந்த ஞாயிறு முதல் நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்