
மாடு திருட்டை தடுக்க விசேட வேலைத்திட்டம்
பல பிரதேசங்களில் இடம்பெறும் மாடு திருட்டை தடுப்பதற்காக வென்னப்புவ பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகரால் விசேட வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம், எட்டு இலட்சம் பெறுமதியான மாடு திருடப்பட்டமை தொடர்பில் பொலிஸாருக்கு அண்மையில் அறிவிக்கப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம், விசேட நடவடிக்கையின் கீழ் சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று இரவில் குற்றத்தடுப்பு கடமையில் ஈடுபட்டிருந்த போது, கொழும்பில் இருந்து வென்னப்புவ நோக்கி நிற்காமல் பயணித்த வேன் ஒன்றை துரத்திச் சென்று பிடித்துள்ளதுடன், அதில் திருடப்பட்ட மாடும் இருந்துள்ளது.
மேலும் சோதனையிட்ட போது வேனில் இருந்து இரண்டு கைக்குண்டுகள், வாள்கள் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
