மாடுகள் முட்டித் தள்ளியதில் முதியவர் உயிரிழப்பு
இந்தியாவில் உத்தரபிரதேச மாநிலத்தில் மாடுகள் முட்டியதில் முதியவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
கான்பூர் காய்கறி மண்டி பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் நாராயண் மிஸ்ரா ( வயது 82 ) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த முதியவர் நேற்றைய முன்தினம் சனிக்கிழமை மதியம் உணவு சாப்பிட்டபிறகு சிறிது தூரம் நடந்துள்ளார். இதன்போது சாலையை வழிமறித்து நின்ற மாடுகளின் கூட்டம், முதியவரை தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட முதியவர் தலையில் பலத்த காயமடைந்து மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.
முதியவரை பரிசோதித்த மருத்துவர்கள் இவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.
இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாதாரணமாக நடந்து சென்றவரை மாடுகள் முட்டித் தள்ளியதில் முதியவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
