மாசு ஏற்படுத்தும் ஆஸ்துமா இன்ஹேலர் – ஆய்வில் அதிர்ச்சி
ஆஸ்துமா மற்றும் நுரையீரல் நோயாளிகள் மருந்தை சுவாசப் பாதைக்குள், உள்ளீர்க்கப் பயன்படுத்தும், இன்ஹேலர் கருவிகளில் உள்ள ஒருவகை வாயுக்களால் ஏற்படும் காற்று மாசு, ஆண்டுக்கு 5.30 இலட்சம் பெட்ரோல் சிற்றூந்துகளினால் ஏற்படும் காற்று மாசுக்கு இணையானது என அமெரிக்க ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆஸ்துமா மற்றும் நுரையீரல் நோய் உள்ளவர்கள் இன்ஹேலர் கருவிகள் மூலம் தங்களுக்கான மருந்தைப் பயன்படுத்துகின்றனர்.
இதில் உலர் பவுடர் உடைய இன்ஹேலர் (Dry Powder Inhaler) மற்றும் சாப்ட் மிஸ்ட் இன்ஹேலர் (Softmist Inhaler) போன்ற வகைகள் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த நிலையில் இந்தக் கருவிகள் குறித்து அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகம் சார்பில் ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன.
அதற்கமைய, உலர் பவுடர் உடைய இன்ஹேலர்களில் மருந்தை எளிதாக நுரையீரலுக்குள் செலுத்த, ‘ஹைட்ரோபுளோரோ அல்கேன்’ (Hydrofluoroalkane) வாயு பயன்படுத்தப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
ஆனால், இது, சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரும் தீங்கு விளைவிக்கும் எனவும் தெரியவந்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் இன்ஹேலர்கள் வெளியிட்ட மாசுவில், 98 சதவீதமும் இந்த வகை இன்ஹேலர்களால் ஏற்பட்டுள்ளதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இது 2.50 கோடி மெட்ரிக் டென் கார்பன் உமிழ்வுக்கு இணையானது.
அத்துடன், இது, ஓராண்டில் அமெரிக்காவில் 5.30 இலட்சம் பெட்ரோல் சிற்றூந்துகள் வெளியிடும் கார்பன்டை ஆக்சைடுக்கு இணையானது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
பிற வகை இன்ஹேலர்களில் இத்தகைய வாயுக்கள் இல்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
எனவே, மருத்துவர்கள் சூழலுக்கு உகந்த இன்ஹேலர்களை பரிந்துரைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
