
மாகாண சம்பியனானது ஏறாவூர் அஸ்ஹர் பெண்கள் உயர்தரப்பாடசாலை
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட ஏறாவூர் அல் அஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலை 2023ம் ஆண்டுக்கான 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான எறிபந்துப் போட்டியில் வெற்றி பெற்று கிழக்கு மாகாண சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வணியினர் முதல் போட்டியில் கல்முனை பற்றிமா கல்லூரி, இரண்டாவது போட்டியில் மட்டக்களப்பு மஹஜன கல்லூரி, அரையிறுதிப்போட்டியில் ஏறாவூர் விபுலானந்தா மகா வித்தியாலயத்தையும் வெற்றி கொண்டு இறுதிப்போட்டியில் திருகோணமலை பெண்கள் உயர்தரப்பாடசாலையுடன் போட்டியிட்டு மாகாண சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




