மாகாண அபிவிருத்தி தொடர்பில் ஆளுனர் தலைமையில் மீளாய்வு கலந்துரையாடல்
-கிண்ணியா நிருபர்-
கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்ன சேகர தலைமையில் மாகாண அமைச்சின் செயலாளர்கள் மற்றும் துறை சார் திணைக்கள தலைவர்களுக்கிடையிலான மாதாத முன்னேற்ற மதிப்பாய்வு கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில், மாகாணத்தின் அபிவிருத்தித் திட்டங்களின் நிதி முன்னேற்றம், இந்திய உதவியுடன் முன்னெடுக்கப்படும் திட்டங்களின் முன்னேற்றம், “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ் மாகாணத்தில் நடைமுறையில் உள்ள செயற்பாடுகள், மாகாண வருமான இலக்குகளை அடைதல் மற்றும் மாகாண பணியாளர் இடமாற்றக் கொள்கை போன்ற விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இதில் மாகாண அமைச்சின் செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
