
மஹியங்கனை ஆதிவாசிகள் கிராம பகுதியில் பாரிய காட்டு தீ
-பதுளை நிருபர்-
மஹியங்கனை மாவரகலை தமான என்ற ஆதிவாசிகள் கிராமத்திற்கு மேற் பகுதியில் அமைந்துள்ள மலை பகுதியில் பாரிய காட்டு தீ பரவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
பதியத்தலாவை வீதியில் 54 ம் கட்டை மாவரகலை தமான ( ஆதிவாசிகள் கிராமத்தில்) பாரிய காட்டு தீ பரவி வருவதாகவும் வரட்சியான காலநிலை அதிகளவான காற்றின் காரணமாக தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

