மஹியங்கனையில் துப்பாக்கிச் சூடு

மஹியங்கனை, தம்பனை, குகுலபொல பகுதியில் உள்ள விகாரை ஒன்றில் இன்று திங்கட்கிழமை முற்பகல் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது விகாரையிலிருந்த எவருக்கும் காயம் ஏற்படவில்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விகாராதிபதியின் அறையை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.