மஹிந்த ராஜபக்ஷ மாதம் 4.6 மில்லியன் ரூபா வாடகை தர வேண்டும் அல்லது வீட்டை விட்டு வெளியேற வேண்டும்!
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட அனைத்து உத்தியோகபூர்வ இல்லங்களையும், அரசாங்கம் மீளப்பெறும், என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அறிவித்தார்.
கட்டுகுருந்தவில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு, உரையாற்றும் போதே, ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
இந்த விடயம் குறித்துப் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ,
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்திற்கான வாடகை, மாதத்திற்கு 4.6 மில்லியன் ரூபாய் ஆகும், அதுவும் நில மதிப்பு சேர்க்கப்படாமல்
ஆகவே, அவர் ஒன்று வீட்டை அரசாங்கத்திடம் மீள கையளித்துவிட்டு வெளியேற வேண்டும், இல்லையேல் மாதாந்தம் வாடகையை தர வேண்டும்
கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகை, கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகை தவிர அனைத்து உத்தியோகபூர் இல்லங்களும், வருமானம் வரக்கூடிய திட்டங்களுக்கு பயன்படுத்தப்படவுள்ளது, என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.