
மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்க சென்ற இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள்
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹேஷா விதானகே மற்றும் திலிப் வெதஆராச்சி ஆகியோர் தங்காலையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளனர்.
மஹிந்த ராஜபக்ஷ தற்போது வசித்து வரும் தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் ஜனாதிபதியின் நலம் விசாரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் சென்றதாக தெரிய வருகின்றது.
ஹேஷா விதானகே முன்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எம்பிலிப்பிட்டிய பிரதேச சபையின் தலைவராகவும், திலிப் வெதஆராச்சி ஐக்கிய மக்கள் சக்தியின் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
