
மஹிந்தவின் உடல்நிலை குறித்து நாமல் வெளியிட்ட தகவல்
கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உடல்நிலை திருப்திகரமாக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
அத்துடன் முன்னாள் ஜனாதிபதியின் உடல்நிலை குறித்து கவலைப்படத் தேவையில்லை என்றும், இது சிறியதொரு உபாதையே என்றும் குறிப்பிட்டார்.
மருத்துவர்களால் முன்னர் பரிந்துரைக்கப்பட்ட பல மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ளவே மஹிந்த ராஜபக்ஷ பிரதானமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் என அவர் மேலும் தெளிவுபடுத்தியுள்ளார்.
