மஹவ – ஓமந்தை ரயில் பாதை இந்தியப் பிரதமரினால் திறந்து வைப்பு

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஞாயிற்றுக்கிழமை அனுராதபுரத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இதன்போது அனுராதபுரம் ரயில் நிலையத்தின் சமிக்ஞை அமைப்பை அவர் திறந்து வைத்தார்.

மேலும் நவீனமயமாக்கப்பட்ட மஹவ – ஓமந்தை ரயில் பாதையையும் இந்தியப் பிரதமர் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.

குறித்த நிகழ்வில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

 

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க