மஸ்கெலியா பிரதேச சபையின் அனுசரணையுடன் கவிதை நூல் வெளியீட்டு விழா

-மஸ்கெலியா நிருபர்-

மஸ்கெலியா பி.எம்.டி.கலாச்சார மண்டபத்தில், மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா இராஜ்குமார் தலைமையில், மஸ்கெலியா சென் ஜோசப் தேசிய கல்லூரியின் முன்னாள் மாணவி செல்வி ஜே.ஜஸ்வரியாவின் கவிதை நூல் வெளியீட்டு விழா, நேற்று வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற்றது.

நிகழ்வில், மஸ்கெலியா பிரதேச சபையின் உதவி தவிசாளர் திரு.கே.விக்னேஸ்வரன், ஜ.எம்.எச்.ஓ நிறுவன தலைவர் திருமதி.சகுந்தலாதேவி, முன்னாள் ஆசிரிய ஆலோசகர் திரு.எஸ்.பி.பரமேஸ்வரன், முன்னாள் மஸ்கெலியா சென் ஜோசப் தேசிய கல்லூரியின் அதிபர் திருமதி.கே.கிருஸ்ணகுமாரி, மஸ்கெலியா பொது நூலக பொறுப்பாளர், இலங்கை வங்கி முகாமையாளர், மக்கள் வங்கி முகாமையாளர், திருமதி.புஸ்பராணி அதிபர் (கிளநூகி தமிழ் வித்தியாலயம் சாமி மலை) ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.