மஸ்கெலியா பிரதேசசபைக்கு உட்பட்ட 41 பாடசாலை மாணவர்களுக்கு இடையே சித்திர போட்டி

மஸ்கெலியா பிரதேச சபையின் உட்பட்ட 41 பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு இடையே சித்திர போட்டி இடம் பெற்று அதில் 20 வீத சித்திரங்கள் இன்று காலை 10 மணிக்கு மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா இராஜ்குமார் மற்றும் உப தவிசாளர் ப.ராஜ்அசோக் தலைமையில் மஸ்கெலியா நகரில் உள்ள டி.எம்.டி.கலாச்சார மண்டபத்தில் காட்சிபடுத்தபட்டது.

இக் காட்சிப் படுத்தப்பட்ட சித்திரங்களை ஹட்டன் கல்வி வலய பணிப்பாளர் அவர்களின் பண்புரைக்கு அமைய உதவி பணிப்பாளர்கள் பார்வை இட்டு முதல் தெரிவு 20 வதுக்கு பரிசில்களும் ஏனையவற்றிக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

நான்கு பிரிவுகளாக பிரித்து தரம் ஒன்று முதல் ஐந்து வரையும், தரம் ஆறு முதல் எட்டு வரையும், தரம் ஒன்பது முதல் பதினொன்று வரையும், தரம் பனிரெண்டு பதிமூன்று வரை பிரிக்கப்பட்டு இந்த போட்டி இடம் பெற்றது.

இந்த சித்திர கண்காட்சி 19 ம் திகதி 20 ம் திகதி டி.எம்.டி கலாச்சாரம் மண்டபத்தில் நடைபெற்று 21 ம் திகதி போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா இராஜ்குமார் வழங்கி வைப்பார்.