மஸ்கெலியா நகரில் கால்நடை அலுவலகத்திற்கான கட்டுமான பணிகள் ஆரம்பம்

-மஸ்கெலியா நிருபர்-

மஸ்கெலியா நகரில், சகல வசதிகளுடன் கூடிய இரண்டு மாடி கட்டடம், கால்நடை அலுவலகத்திற்காக கட்டப்பட்டு வருகிறது.

பல ஆண்டுகளாக மஸ்கெலியா நகரத்தின் முக்கிய குறைபாடாக இருந்த, கால்நடை அலுவல பிரச்சினையை தீர்க்கும் வகையில், 2025 மாகாண சபை நிதி ஒதுக்கீட்டின் கீழ், 40 மில்லியன் ரூபா செலவில் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்த இரண்டு மாடி கட்டிடம், கால்நடை தலைமை அலுவலகம் மற்றும் உத்தியோகபூர்வ குடியிருப்புகளைக் கொண்டிருக்கும்.

வசதிகளுடன் கூடிய இந்த பெரிய கட்டிடம் கட்டப்பட்ட பிறகு, மஸ்கெலியா பகுதியில் கால்நடை பண்ணையாளர்களுக்கு ஒரு சிறந்த சேவை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது

நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான மஞ்சுள சுரவீராச்சியின் அறிவுறுத்தலின் பேரில், மஸ்கெலியா பிரதேச சபை உறுப்பினர் அவிஷ்க வீரதுங்கவின் ஒருங்கிணைப்பில் இந்த விடயம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.