மஸ்கெலியா கவிஞருக்கு இந்தியாவில் விருது

-மஸ்கெலியா நிருபர்-

மஸ்கெலியா ( கிளண்டில்) காட்டு மஸ்கெலியா மண்ணைச் சார்ந்த கீதவாணி விக்டர் கவிஞருக்கு இந்தியாவில் மகத்தான விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளார்.

படைப்பு சங்கமத்தின் 10 வது ஆண்டு விழாவை முன்னிட்டு இலங்கை கவிஞருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது

கீதவாணி இளம் வயதிலிருந்தே கவிதை எழுதி வருகிறார், பல படைப்புகளுக்கு எழுதி வருவதோடு பாடல்களும் எழுதி வருகிறார், பல சவால்களை சந்தித்து பல இலக்குகளை கடந்து இன்று இந்தியாவில் எழுத்துத்துறையில் காலடி எடுத்து வைத்துள்ளார்.

இவரின் அடுத்த இலக்கு திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதுவது, மேலும் பல சாதனைகளை படைக்க வேண்டும்.

சென்னையில் மிகவும் பிரமாண்டமான விருது வழங்கும் இந் நிகழ்வில் கவிஞர்கள், எழுத்தாளர்கள், திரைப்பட இயக்குநர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.